Home நாடு ஜக்தீப் சிங் டியோ மருத்துவ சிகிச்சைக்காக விடுப்பு – இடைக்காலத் துணை முதல்வர் நியமிக்கப்படுவாரா?

ஜக்தீப் சிங் டியோ மருத்துவ சிகிச்சைக்காக விடுப்பு – இடைக்காலத் துணை முதல்வர் நியமிக்கப்படுவாரா?

335
0
SHARE
Ad
ஜக்டீப் சிங் டியோ

ஜார்ஜ் டவுன்: பினாங்கு 2-வது துணை முதல்வர், ஜக்தீப் சிங் தியோ, தனது கணுக்கால் சிகிச்சைக்காக விடுப்பு எடுத்துள்ளதாகவும், சில வாரங்களுக்கு பணிக்குத் திரும்பப் போவதில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.

“நான் கீழே விழுந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தாலும், என் கணுக்கால் இன்னும் வலிக்கிறது. நான் மிகவும் நொண்டி நொண்டி நடந்ததை உங்களில் பெரும்பாலானோர் கவனித்திருப்பீர்கள்,” என்று அவர் திங்கட்கிழமை (ஜூலை 22) கூறினார்.

தனது கணுக்கால் காயம் குறித்து இரண்டாவது கருத்தைப் பெற கோலாலம்பூரில் தற்போது இருப்பதாக ஜக்தீப் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, முதலமைச்சர் சௌ கொன் யோவ் இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடுவதாகக் கூறினார்.

“என் அறிக்கைக்காக காத்திருங்கள்,” என்று அவர் கூறினார்.

ஜக்தீப் சிங் விடுப்பு எடுப்பது அரசியல் ஆரூடங்களையும் எழுப்பியுள்ளது. அவர் நீண்ட கால விடுமுறையில் செல்வதால் அவருக்கு பதிலாக இடைக்கால துணை முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவாரா? அல்லது அவர் பணிக்குத் திரும்பும்வரை அந்தப் பதவி காலியாக வைத்திருக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.