கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சரும் ஜசெக தலைவருமான கோபிந்த் சிங் இலக்கவியல் – டிஜிடல் – அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் காரணமாகவே அவரின் தம்பி ராம் கர்ப்பால் சிங் தன் பதவியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகினார் என அந்தோணி லோக் தெரிவித்தார்.
சகோதரர்கள் இருவரும் அமைச்சரவையில் இருப்பது குறித்த கண்டனங்கள், எதிர்ப்புகள் எழும் என்ற காரணத்தால்தான் ராம் கர்ப்பால் தன் பதவியை ராஜினாமா செய்தார் எனவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.
ஏற்கனவே, கோபிந்த் சிங்கின் இன்னொரு சகோதரர் ஜக்டீப் சிங் டியோ பினாங்கு துணை முதல்வராக இருக்கிறார். இது குறித்தும் இந்திய சமூகத்தில் கடுமையான அதிருப்திகள் நிலவி வருகின்றன.
பதவி விலகிய ராம் கர்ப்பாலுக்கு பதிலாக முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் பிரதமர் துறையில் (சட்டம் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள்) துணையமைசராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.