Home நாடு பி.கே.ஆர் கட்சியின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் துணை அமைச்சராகும் ரமணன் ராமகிருஷ்ணன்!

பி.கே.ஆர் கட்சியின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் துணை அமைச்சராகும் ரமணன் ராமகிருஷ்ணன்!

336
0
SHARE
Ad
டத்தோ ஆர்.ரமணன்

கோலாலம்பூர் : இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி துணை அமைச்சராக பொறுப்பு வகித்த தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு கழக அமைச்சுக்கான துணை அமைச்சர் பொறுப்புக்கு தற்போது ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் க.சரஸ்வதி

சரஸ்வதி கந்தசாமி ஒற்றுமைத் துறை அமைச்சின் துணை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சி சார்பில் சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகித்தாலும்  அவர்களுக்கு அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் இதுவரை துணையமைச்சர், அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை.

இப்போதுதான் முதன் முறையாக பிகேஆர் சார்பில் அன்வார் அமைச்சரவையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2018-இல் துன் மகாதீர் தலைமையில் பக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கம் அமைந்தபோது அப்போது கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் சேவியர் ஜெயகுமார் முழு அமைச்சராக மகாதீரால் நியமிக்கப்பட்டார்.

15-வது பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் ம இ கா தேசியத் துணைத் தலைவர் சரவணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டார் சரஸ்வதி. எனினும் அன்வார் இப்ராகிமின் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் செனட்டர் ஆக நியமிக்கப்பட்டு துணை அமைச்சராக பொறுப்பு வகித்தார் சரஸ்வதி.

பி கே ஆர் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் இந்தியர்களில் தற்போது ரமணன் மட்டுமே துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மித்ரா என்னும் இந்திய உருமாற்று அரசாங்க அமைப்பின் பொறுப்பாளராகவும் ரமணன் செயல்பட்டு வருகிறார்