Home தேர்தல்-14 “விலகிக் கொள்ளுங்கள்” – அபாண்டி அலிக்கு கோபிந்த் சிங் கோரிக்கை

“விலகிக் கொள்ளுங்கள்” – அபாண்டி அலிக்கு கோபிந்த் சிங் கோரிக்கை

1181
0
SHARE
Ad
டான்ஸ்ரீ அபாண்டி அலி

கோலாலம்பூர் – அரசாங்கத்திற்குத் தற்போது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் என யாரும் இல்லை என பிரதமர் துன் மகாதீர் அறிவித்ததைத் தொடர்ந்து, அபாண்டி அலி அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும், அபாண்டி அலி இதுவரையில் இதுகுறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் பூச்சோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ அபாண்டி அலி அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.