Home தேர்தல்-14 நஜிப் வீட்டைச் சுற்றிக் காவல்! பத்திரிக்கையாளர்கள் அனுமதி இல்லை

நஜிப் வீட்டைச் சுற்றிக் காவல்! பத்திரிக்கையாளர்கள் அனுமதி இல்லை

1713
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜாலான் டூத்தாவிலுள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக் இல்லம் காவல் துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அவரைச் சந்திக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நஜிப்-ரோஸ்மா இருவரும் வெளிநாடு செல்வதற்கும் குடிநுழைவுத் துறை தடை விதித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் உறவினர்களின் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்தினர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.