Home தேர்தல்-14 “நஜிப் – ரோஸ்மா வெளிநாடு செல்ல நான்தான் தடை விதித்தேன்” – மகாதீர்

“நஜிப் – ரோஸ்மா வெளிநாடு செல்ல நான்தான் தடை விதித்தேன்” – மகாதீர்

1230
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் உத்தரவை குடிநுழைவுத் துறையினருக்கு தான் பிறப்பித்ததாக பிரதமர் துன் மகாதீர் நேற்று அறிவித்தார்.

நஜிப் வெளிநாட்டிலேயே தங்கி விட்டால், அவரை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வரும் சட்டப் போராட்டங்களைத் தவிர்க்கவே தான் அவ்வாறு செய்ததாகவும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் இந்தோனிசியா செல்வதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களுக்குக் குடிநுழைவுத் துறை தடை விதித்திருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இது குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்ட நஜிப் ‘நான் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கக்கப்பட்டிருப்பதாக குடிநுழைவுத் துறை தெரிவித்திருக்கிறது. அந்த முடிவை நான் மதிக்கிறேன். உள்நாட்டிலேயே எனது குடும்பத்தினருடன் இருந்து வருவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.