Home உலகம் ஸ்பெயின் புதிய பிரதமர் பெட்ரோ சாஞ்சிஸ்

ஸ்பெயின் புதிய பிரதமர் பெட்ரோ சாஞ்சிஸ்

973
0
SHARE
Ad
பெட்ரோ சாஞ்சிஸ் – ஸ்பெயின் புதிய பிரதமர்

மாட்ரிட் – ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சாஞ்சிஸ் வெள்ளிக்கிழமை (1 ஜூன்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் அந்நாட்டின் 7-வது பிரதமராவார்.

சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவர் 84 தொகுதிகளை மட்டுமே கொண்டிருந்தாலும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் 350 இடங்களைக் கொண்ட ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறார்.

#TamilSchoolmychoice

இதுவரையில் பிரதமராக இருந்த மரியானோ ரஜோய் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டு, அந்த வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார்.

அவருக்குப் பதிலாக 46 வயதான பெட்ரோ சாஞ்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.