Home உலகம் ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – இத்தாலி 1; பினால்டி கோல்களில் இத்தாலி வெற்றி!

ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – இத்தாலி 1; பினால்டி கோல்களில் இத்தாலி வெற்றி!

1308
0
SHARE
Ad

இலண்டன் : இன்று புதன்கிழமை (ஜூலை 7) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற அரை இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் ஸ்பெயினைத் தோற்கடித்து இத்தாலி இறுதி ஆட்டத்திற்குத் தேர்வானது.

கூடுதல் நேரம் வழங்கப்படும் இரண்டு குழுக்களும் தலா ஒரு கோல் மட்டுமே போட்டு சமநிலை கண்டிருந்தன.

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோல் ஏதும் அடிக்க முடியாமல் தடுமாறின. எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இத்தாலி ஒரு கோல் போட்டு முன்னணிக்கு வந்தது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து ஸ்பெயினும் மற்றொரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலையாக்கியது.

90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரண்டு குழுக்களுமே கோல் அடிக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து பினால்டி கோல்களின் மூலம் வெற்றியாளரை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டது.

4-2 கோல்களில் இத்தாலி பினால்டி கோல்களில் ஸ்பெயினை வெற்றி கொண்டது.

இலண்டனின் வெம்ப்ளி அரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெறும் மற்றொரு இறுதி ஆட்டத்தில் டென்மார்க், இங்கிலாந்துடன் மோதுகின்றது.

இதில் வெற்றி பெறும் குழு எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் இத்தாலியைச் சந்திக்கும்.

ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் கடந ஒரு மாதமாக நடைபெற்று தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உக்ரேன் ஆகியவையே கால் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாயின.

இந்த 8 குழுக்களுக்கிடையிலான ஆட்டங்கள் நடைபெற்று இதில் டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகள் அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகின.