Home One Line P2 2,000 வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களின் கூடுகள் கண்டுபிடிப்பு

2,000 வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களின் கூடுகள் கண்டுபிடிப்பு

620
0
SHARE
Ad

ரோம்: பாம்பே எரிமலை வெடிப்பில் சிக்கி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இருவரது எலும்பு கூடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போது இவர்களது எழும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாக 1595- ஆம் ஆண்டில் இந்த மறைந்த நகரங்களின் சில பகுதிகள் ஆராயப்பட்டன. அடுத்து 1748- இல் பாம்பே நகரத்தை ஆய்வாளர் தோண்டிப் பல தடயங்களைக் கண்டுபிடித்தனர்.

சமீபத்திய கண்டுபிடிப்பில், ஒருவர் செல்வந்தர் என்றும், மற்றொருவர் அவருக்கு அடிமையாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வெப்ப அதிர்ச்சியால் அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கி.பி.79 முதலாம் நூற்றாண்டில் வெஸ்சூவியஸ் சிகரத்தில் எரிமலைக் குமுறல் கிளம்பி ஹெர்குலானியம், பாம்பே எனும் இரு பெரும் பண்டைய ரோமப் பேரரசின் நகரங்கள் புதைத்து போயின. அதில் சிக்கி சுமார் 20,000 பேர் அதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.