Home One Line P1 பெர்சாத்துவுடன் இணைய, பாஸ் வற்புறுத்தத் தேவையில்லை!

பெர்சாத்துவுடன் இணைய, பாஸ் வற்புறுத்தத் தேவையில்லை!

425
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்துவை நட்பு கூட்டணிக் கட்சியாக ஏற்க யாரும் வற்புறுத்த முடியாது என்று அம்னோ கட்சியின் உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, முவாபாகாட் நேஷனனில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சி, அம்னோவின் நிலைப்பாட்டை மதித்து, புரிந்து நடந்துக் கொள்ளுமாறு அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மலாய் முஸ்லிம் அரசியலில் பாஸ்-அம்னோ கூட்டணி அதிக நன்மையைப் பெற்றுள்ளது. அதனை அம்னோ மதிக்கிறது. பாஸ் கட்சி தேசிய கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், அம்னோ அதனை எதிர்க்கவில்லை. மாறாக, அம்னோ அதனை மதித்து, புரிந்து கொண்டது. மேலும், முவாபாகாட் நேஷனல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாஸ் யாருடன் இணைவது என்ற நிர்பந்தம் இல்லை. இதே நிலையில், அம்னோ-பெர்சாத்து உறவு தொடர்பாக பாஸ் கட்சி வற்புறுத்தக்கூடாது. அம்னோவை பாஸ் கட்சி வற்புறுத்தாது என்று நினைக்கிறோம். அம்னோவும் அதனை விரும்பவில்லை,” என்று காலிட் தெரிவித்தார்.

அம்னோவின் உதவியால் பிற கட்சிகள் வெற்றிப் பெறவும், ஆட்சியை நடத்தவும், அம்னோ விரும்பவில்லை என்று காலிட் கூறினார்.

அம்னோவின் முக்கியத்துவம் என்னவென்றால், பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பு. அம்னோவின் பாதையே அதுவே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.