Home One Line P1 தலைவரை முந்திக் கொண்டு கருத்து தெரிவிப்பதை அனுவார் நிறுத்த வேண்டும்

தலைவரை முந்திக் கொண்டு கருத்து தெரிவிப்பதை அனுவார் நிறுத்த வேண்டும்

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் அம்னோவின் நிலைப்பாடு குறித்து அனுவார் மூசா சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, மற்றொரு அம்னோ தலைவர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசாவை விமர்சித்துள்ளார்.

அண்மையில் ஒரு நேர்காணலில், அம்னோ கட்சி தன்னை உயர்ந்ததாக நினைத்துக் கொள்வதாகவும், கடந்த பொதுத் தேர்தலில் இழந்ததை மறந்துவிட்டதாகவும் அனுவார் கூறியிருந்தார்.

அம்னோவிற்கு அரசாங்கத்தில் நல்ல மரியாதை இல்லை என்ற கருத்து தொடர்பாக அவரது கூற்று அமைந்திருந்தது.

#TamilSchoolmychoice

அனுவாரின் கூற்றானது, பெர்சாத்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் போல உள்ளதாக, அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் புவாட் கூறியுள்ளார்.

“அனுவார், அம்னோவை ஒரு மோசமான சூழ்நிலையில் வைத்துப் பேசுகிறார். அவர் ஏன் மற்றொரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்க வேண்டும்,?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

14-வது பொதுத் தேர்தலில் அம்னோவின் தோல்வி குறித்து அனுவார் கூறியது குறித்து புவாட் கருத்து தெரிவித்தார். ஆயினும், அம்னோ இன்னும் அதிக நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளது என்றும் புவாட் கூறினார்.

“ஓர் அரசாங்கத்தை உருவாக்க போதுமான நண்பர்களைக் கண்டுக்கொள்ள அம்னோ தவறிவிட்டது, அவ்வளவுதான். பெர்சாத்து 13 இடங்களை மட்டுமே வென்றது. ஆனால் ஜசெக, பிகேஆர், வாரிசான் மற்றும் அமானாவுடன் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் அது வெற்றி பெற்றது,” என்று முன்னாள் பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

அதன்பிறகு அமைந்த தேசிய கூட்டணி அரசாங்கம், ஒன்றாக உருவாக்கப்பட்ட ஒரு புதிய கூட்டணி என்றும், யார் வெல்வார்கள், யார் தோற்றார்கள் என்ற கேள்வி  எழவில்லை என்றும் புவாட் கூறினார்.