Home உலகம் அபுதாபி பெராரி வேர்ல்டு: உலகின் மிகப்பெரிய உள்ளரங்க வாகன விளையாட்டு பூங்கா!

அபுதாபி பெராரி வேர்ல்டு: உலகின் மிகப்பெரிய உள்ளரங்க வாகன விளையாட்டு பூங்கா!

740
0
SHARE
Ad

dhabi_1_galleryஅபுதாபி, டிசம்பர் 29 – அபுதாபி யாஸ் தீவு பகுதியில் 2010-ல் திறக்கப்பட்ட‌  ஃபெராரி வேர்ல்டு என்றழைக்கப்படும் வாகன‌ விளையாட்டு கேளிக்கை பூங்கா அமைந்துள்ளது.

உலகின் அதிவேகமான‌ ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட பல்வேறு வாகன‌ விளையாட்டு சாதனங்களை உள்ளடக்கி, 86,000 சதுர மீட்டரில் உலகின் மிகப் பெரிய உள்ளரங்க பூங்காக்களில் ஒன்றாக திகழ்கிறது.

Tamil_Dailyஉலகம் முழுவதுமிருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

#TamilSchoolmychoice

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களும், மிக சிறந்த இத்தாலியன் உணவகங்கள் விற்பனை பேரங்காடிகள், 20-க்கும் மேற்பட்ட வித்தியாசமான ரோலர் கோஸ்டர் சவாரிகளும் இந்த உள்ளரங்கத்தில் உள்ளன.