Home நாடு அல்லாஹ் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? – நஜிப்புக்கு அன்வார் கேள்வி

அல்லாஹ் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? – நஜிப்புக்கு அன்வார் கேள்வி

550
0
SHARE
Ad

Anwar-Ibrahim_1568721cகோலாலம்பூர், ஜன 7 – மலேசிய பைபிள் கழகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

கடந்த வாரம் மலேசிய பைபிள் கழக அலுவலகம் (BSM), இஸ்லாமிய விவகார இலாகாவால் (ஜாயிஸ்) சோதனையிடப்பட்டு மலாய் மொழியில் இருந்த 300 பைபிள் பிரதிகளும், ஐபானில் இருந்த 10 பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் தான் இந்த சோதனைக்கு அனுமதி வழங்கவில்லை என்று பிரதமர் நஜிப் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இது குறித்து கருத்துரைத்த அன்வார், நஜிப் இந்த சோதனைக்கு அனுமதி வழங்கவில்லை என்றால், அல்லாஹ் விவகாரத்தில் அவரது நிலைப்பாடு என்ன? என்பதை மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சோதனை தேவையில்லாத ஒன்று என்றும், இதனால் நாட்டில் மேலும் பிரச்சனைகள் தான் உருவாகும் என்றும் அன்வார் தெரிவித்தார்.