Home One Line P1 அல்லாஹ் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீட்டை தொடர வேண்டும்

அல்லாஹ் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையீட்டை தொடர வேண்டும்

500
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: அல்லாஹ் வார்த்தையின் பயன்பாடு குறித்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை தொடருமாறு அரசாங்கத்திற்கு சுல்தான் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தீர்ப்பின் மூலமாக முஸ்லிமல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை மத மற்றும் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கிறது.

“ஜோகூரில் இஸ்லாத்தின் தலைவராக, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முறையீட்டை ஆதரிக்க தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க ஜோகூர் இஸ்லாமிய மன்றத்திற்கு உத்தரவிடுவதாகவும் சுல்தான் இப்ராகிம் மேலும் கூறினார்.

முஸ்லிமல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஜோகூர் பத்வாவை மேற்கோள் காட்டி, இஸ்லாமிய போதனைகளின்படி அதன் உண்மையான அர்த்தத்திற்கு இணங்காத முஸ்லிமல்லாதவர்களால் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என்று கூறினார்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழிகளில் தவிர, முஸ்லிமல்லாதவர்களால் “அல்லாஹ்” பயன்படுத்தப்படுவதையும் மாநில சட்டங்கள் தடைசெய்துள்ளன என்றும் அவர் கூறினார்.

முஸ்லிமல்லாதவர்களால் “அல்லாஹ்”, “பைத்துல்லா”, “சோலாத்” மற்றும் “கபா” என்ற சொற்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய 1986 டிசம்பர் 5- ஆம் தேதி உள்துறை அமைச்சக உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது.