Home One Line P1 அம்னோ- பிகேஆர் சந்திப்பு குறித்து நம்பிக்கை கூட்டணியிடம் அன்வார் விளக்கம்

அம்னோ- பிகேஆர் சந்திப்பு குறித்து நம்பிக்கை கூட்டணியிடம் அன்வார் விளக்கம்

581
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர்களுடனான தனது சமீபத்திய சந்திப்பு குறித்து கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் விளக்கியதாக அமானா துணைத் தலைவர் சலாஹுடின் அயோப் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பின்னர் நம்பிக்கை கூட்டணி இடையே விவாதிக்கப்பட்டது, ஆனால், அம்னோவுடன் இணைந்து செயல்படும் என்ற எந்த உறுதிப்பாடும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“அம்னோவுடன் சந்திப்பு வழக்கம் போல் நடைபெற்றது என்று எங்களுக்கு விளக்கப்பட்டது. ஆனால் பொதுத் தேர்தலில் அவர்களுடன் எந்த உறுதிப்பாடும் இல்லை. இதன் பொருள் இது ஒரு சாதாரண சந்திப்பு. பேச்சுவார்த்தை இருந்தது, ஆனால், உடன்பாடு இல்லை. எந்த உறுதிப்பாடும் இல்லை, அதைப் பற்றி எந்தக் கொள்கையும் இல்லை,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சிகள் மற்ற அம்னோ தலைவர்களுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று சலாஹுடின் விளக்கினார்.

“ஊழல்வாதிகளுடனான ஒத்துழைப்பை நிராகரிப்பதன் பொருள் நீதிமன்ற வழக்குகளைச் சந்திப்பவர்களை குறிக்கிறது. நாங்கள் இன்னும் மற்ற அம்னோ தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.