Home One Line P2 மலேசியாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக வட கொரியா அறிவிப்பு

மலேசியாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக வட கொரியா அறிவிப்பு

767
0
SHARE
Ad

சியோல்: வட கொரிய குடிமகனை அமெரிக்காவிடம் ஒப்படைத்த பின்னர் மலேசியாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதாக பியோங்யாங் இன்று அறிவித்தது. இது அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 17 அன்று, மலேசிய அதிகாரிகள் “மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தைச் செய்தார்கள். அப்பாவி குடிமகனை (வட கொரியா) வலுக்கட்டாயமாக அமெரிக்காவிடம் ஒப்படைத்தது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் “இதன்மூலம் மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக முறித்துக் கொள்வதாக அறிவிக்கிறது,” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையில் பெயரிடப்படாத நபர் சிங்கப்பூரில் சட்டபூர்வமான வெளி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோத பண மோசடியில் ஈடுபட்டதாக வாதிடுவது ஒரு புனைகதை என்றும் அது வலியுறுத்தியது.