Home One Line P2 ஒலிம்பிக்கிலிருந்து முதல் நாடாக வட கொரியா விலகிக் கொண்டது

ஒலிம்பிக்கிலிருந்து முதல் நாடாக வட கொரியா விலகிக் கொண்டது

556
0
SHARE
Ad

தோக்கியோ: இந்த ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

கொவிட் -19- லிருந்து தனது விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.

2018- ஆம் ஆண்டில், குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரொயாவும், தென் கொரியாவும் ஒரு கூட்டு அணியில் நுழைந்தனர், இது தொடர்ச்சியான வரலாற்று உச்சிமாநாட்டிற்கு வழிவகுத்தது.

#TamilSchoolmychoice

பியோங்யாங் தங்கள் நாட்டில் தொற்றுகள் இல்லை என்று கூறுகிறது, ஆனால் இது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த விளையாட்டுப் போட்டியை முதல் பெரிய நாடாக, வட கொரியா நிராகரித்துள்ளது. இந்தப் போட்டி ஜூலை 23- ஆம் தேதி தொடங்க உள்ளது.