Home One Line P1 ஊழல்வாதிகளை ஒதுக்கி அம்னோ ஜசெகவுடன் பேசத் தயாரா?

ஊழல்வாதிகளை ஒதுக்கி அம்னோ ஜசெகவுடன் பேசத் தயாரா?

503
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜசெகவுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேச அம்னோ தயாராக உள்ளதா என்று சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் கேள்வி எழுப்பியுளார். ஆனால், அது அதன் ஊழல் தலைவர்களை விலக்கினால் மட்டுமே இது சாத்தியம் என்று அவர் கூறினார்.

அம்னோ அவ்வாறு செய்யத் தயாரா அல்லது அதற்கு நேர்மாறாக இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நாட்டின் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழிகளில் ஒன்றாக, ஜசெக மற்றும் அம்னோவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவது என்று மக்கள் நினைப்பதாக லோக் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆனால் இதற்கு இரு தரப்பிலிருந்தும் அரசியல் தைரியமும் உறுதியும் தேவை. அம்னோ இதைப் பற்றி பேசத் தயாரா? ஜசெகவைப் பொறுத்தவரை, நிச்சயமாக நாங்கள் விவாதிக்கத் தயாராக உள்ளோம்,” என்று நேற்று இரவு ஆஸ்ட்ரோ அவானிக்கு அளித்த பேட்டியில் லோக் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் அண்மையில் பிகேஆர் தற்போது அம்னோவுடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அம்னோ தலைவர்கள் அழைக்கப்பட்டனர் என்று நம்பப்படுகிறது. அவர்களில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியும் அடங்குவார்.

அம்னோவுடனான அவர்களின் ஒத்துழைப்பு குறித்து ஜசெக தெளிவான நிபந்தனைகளை வகுத்துள்ளதாக லோக் கூறினார்.

“எந்தவொரு ஊழல் தலைவருடனும், நீதிமன்றங்களால் குற்றவாளி அல்லது குற்றவாளி எனக் கருதப்படுபவருடனும், அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் பணியாற்ற மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், அம்னோ தலைவர்கள் பலர் ஜசெகவுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்று பலமுறை கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை மாறக்கூடும் என்று லோக் கருதுகிறார்.

“எந்தவொரு கட்சியும் அடுத்த அடுத்த பொதுத் தேர்தலில் வெல்லவில்லை என்றால், புதிய கூட்டணிகளை, எவ்வாறு உருவாக்குவது என்பதை கண்டறிய வேண்டும். அது பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் நடக்கும், ” என்று அவர் கூறினார்.