Home One Line P1 காவல் துறை தலைவரிடமிருந்து முழு அறிக்கை வேண்டும்!

காவல் துறை தலைவரிடமிருந்து முழு அறிக்கை வேண்டும்!

385
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறையில் கீழறுப்பு வேலைகள் நடப்பதாகக் கூறப்படுவது குறித்து உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின், காவல் துறை தலைவரிடமிருந்து முழு அறிக்கையை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஜனவரி மாதத்தில் ஹாமிட் காவல்துறையில் ஒரு தவறான கூட்டமைப்பு இருப்பதை வெளிப்படுத்தினார்.

புதன்கிழமை, ஹாமிட்அவரை வீழ்த்த விரும்பும் இளம் காவல் துறை அதிகாரிகளிடையே ஓர் இயக்கம் இருப்பதாகவும் வெளிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“ஓர் அமைச்சராக எனக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று நேற்று தெரிவித்தேன். எனவே நான் நேற்று காவல் துறை தலைவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். எனக்கு முழு அறிக்கை வேண்டும் என்று சொன்னேன்,” என்று அமைச்சர் கூறினார்.

இம்மாதிரியான தவறான கூட்டமைப்புகள் குறித்த வழக்குகளுக்கு காவல் படை ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு ஹம்சா கேட்டுக் கொண்டார். நேற்று, தம்மை வீழ்த்துவதற்கான இயக்கம் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் ஹாமிட் கூறியிருந்தார்.