Home One Line P1 சாஹிட் ஹமிடி வழக்கு: அரசு தரப்பு தனது வாதங்களை முடித்தது

சாஹிட் ஹமிடி வழக்கு: அரசு தரப்பு தனது வாதங்களை முடித்தது

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட ஊழல், பணமோசடி மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான 99 சாட்சிகளிடமிருந்து சாட்சியம் கேட்ட பின்னர், அரசு தரப்பு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 19) அதன் வாதத்தை முடித்தது.

இந்த விவகாரத்தை துணை அரசு வழக்கறிஞர் ராஜா ரோசெலா ராஜா தோரன் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேராவிடம் தெரிவித்தார்.

அழைக்கப்பட்ட சாட்சிகளில் அகமட் சாஹிட்டின் மனைவி ஹமீடா காமிஸ்; அகமட் சாஹிட்டின் தம்பி, முகமட் நாசே அகமட் தர்மிசி; அகமட் சாஹிட்டின் மகள், நூருல் ஹிடாயா; அத்துடன் தொழிலதிபர் காலிட் முகமட் ஜிவா ஆவர்.

#TamilSchoolmychoice

மே 28- க்கு முன்னர் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய கோலின் அரசு தரப்பு மற்றும் தற்காப்புக்கும் உத்தரவிட்டார்.

அகமட் சாஹிட் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டாரா அல்லது தன்னை தற்காத்துக் கொள்ள உத்தரவிடப்படுவாரா என்பதை தீர்மானிப்பதற்கு முன், ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை இரு தரப்பினருக்கும் வாய்வழி சமர்ப்பிப்பதற்கான தேதியாக நீதிபதி நிர்ணயித்தார்.

அகால்பூடி அறக்கட்டளை நிதி சம்பந்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகளை அகமட் சாஹிட் எதிர்கொள்கிறார்.