Home நாடு ‘ஹார்டு ராக் கேப்’ திறக்கலாம் ஆனால் மது விற்பனை கூடாது – அட்னான்

‘ஹார்டு ராக் கேப்’ திறக்கலாம் ஆனால் மது விற்பனை கூடாது – அட்னான்

776
0
SHARE
Ad

hard-rock-cafe-logoபுத்ரஜெயா, ஜன 8 – புத்ரஜெயாவில் ஹார்டு ராக் கேப் கடை திறக்க வேண்டும் என்று கூறப்படும் விண்ணப்பங்களுக்கு பதிலளித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், இஸ்லாமிய கடுப்பாடுகளுக்கு உடன்பட்டால் மட்டுமே அக்கடைக்கு தான் அனுமதியளிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அக்கடையில் மது விற்பனை இருக்கக்கூடாது. அதோடு சுத்தமான சூழலைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அட்னான் தெரிவித்துள்ளார்.

“புத்ரஜெயாவிற்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி தான் நாம் நடக்க வேண்டும். நாட்டிலுள்ள மற்ற நகரங்களுக்கு முன்னுதாரணமாக புத்ரஜெயா உள்ளது. அதை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.” என்றும் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஹார்டு ராக் கேப் கடை திறப்பது தொடர்பாக புத்ரஜெயா நகரசபை தலைவர் டான்ஸ்ரீ அசே சே மாட்டுக்கும், ஹார்டு ராக் கேப் முதலீட்டாளர் டான்ஸ்ரீ சையத் யூசோப் சையத் நசீருக்கும் இடையில் பேஸ்புக்கில் நடந்த விவாதம் குறித்து அட்னான் கருத்துத் தெரிவித்தார்.

எனினும், ஹார்டு ராக் கடை திறப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான விண்ணப்பமும் கிடைக்கவில்லை என்று ஆசே கூறிய அதே நேரத்தில், அனைத்துலக ஹார்டு ராக் நிறுவனமும் புத்ரஜெயாவில் கிளை திறப்பது தொடர்பாக கூறப்படுவதை மறுத்துள்ளது.

நாட்டிலுள்ள 24 மணி நேர 7- Eleven கடைகளிலேயே புத்ரஜெயா கிளையில் மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் அட்னான் தெரிவித்தார்.