Home இந்தியா “விஜய்காந்துடன் சேர்ந்தால் திமுக எப்படி உருப்படும்?” – மு.க.அழகிரி காட்டம்!

“விஜய்காந்துடன் சேர்ந்தால் திமுக எப்படி உருப்படும்?” – மு.க.அழகிரி காட்டம்!

745
0
SHARE
Ad

Alagiri-MK-300-x-200சென்னை, ஜனவரி 7 – கொஞ்சநாள் அமைதிப் பூங்காவாக இருந்த திமுகவில் மீண்டும் குடும்ப அரசியல் சர்ச்சை தலைதூக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

புதிய தலைமுறைதொலைக்காட்சிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டலஅமைப்புச் செயலாளரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி அளித்த பேட்டியில் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்துடன் இணைந்தால்திமுக கூட்டணி உருப்படாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கட்சியில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சராகத் தான் இருந்தும் தனக்கு அறிவிக்கப்படாமலேயே மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறியது என்றும் அழகிரி கூறியுள்ளார்.

இதற்கிடையில், தேமுதிகவும் திமுகவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இணையும் என்ற ஆரூடங்கள் பெருகி வரும் வேளையில் விஜய்காந்தைப் பற்றியும் தாக்கி அழகிரி கூறியுள்ளார்.

“தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரு அரசியல்வாதியாகவே நான் மதிக்கவில்லை.அவரிடம் அரசியல் நாகரிகமே இல்லை. என்னுடைய தலைமையின் கீழ் இருந்தால், கூட்டணியில் இருப்பேன் என்று கூறுகிறார். அப்படிப்பட்டவரை திமுககூட்டணியில் எப்படி சேர்ப்பது? டெல்லியில் 11 இடங்களில் போட்டியிட்டுவெறும் 2,000 ஓட்டுகள் வாங்கி இருக்கிறார். அவருடன் சேர்ந்தால் கூட்டணிஎப்படி உருப்படும்?” என்றும் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

“திமுகவில் தற்போது உள்ள விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், புதியதமிழகம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குபோதும். பல மாவட்டங்களில் திமுக இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அனைவரும்ஒருங்கிணைந்து செயல்பட்டாலே போதும்” என்றும் அழகிரி கூறியிருக்கின்றார்.