Home இந்தியா கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுக-வில் இணைவேன்: அழகிரி

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுக-வில் இணைவேன்: அழகிரி

1276
0
SHARE
Ad

சென்னை – திமுக தலைவர் மு.கருணாநிதி அழைப்பு விடுத்தால் மீண்டும் கட்சியில் இணைவேன் என மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

மு.க.அழகிரி பேரனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மு.க.அழகிரி கோபாலபுரம் சென்று தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, கருணாநிதியின் உடல்நலம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அப்போது, திமுகவில் மீண்டும் இணைவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கருணாநிதி அழைப்பு விடுத்தால் இணைவேன் எனப் பதிலளித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, அதன் பின்னர் தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.