Home தேர்தல்-14 மலேசியாகினி இரண்டு வாரங்களுக்கு இனி இலவசம்

மலேசியாகினி இரண்டு வாரங்களுக்கு இனி இலவசம்

961
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி இணைய ஊடகமான மலேசியாகினி, சந்தாக் கட்டண அடிப்படையில் இயங்கி வரும் ஊடகமாகும்.

ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனது பங்களிப்பாக இன்று வியாழக்கிழமை முதல் மலேசியாகினி இணையத் தளத்தை வாசகர்கள் இலவசமாகவே அணுகலாம் என அந்த ஊடகம் அறிவித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின்போதும் இதே போன்றதொரு சலுகையை மலேசியாகினி மலேசிய வாசகர்களுக்கு வழங்கியது.

#TamilSchoolmychoice

இந்த இலவச சலுகை அடுத்த இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் மலேசியாகினி தெரிவித்துள்ளது.