Home தேர்தல்-14 தேர்தல் 14: பென்சியாங்கானில் ஜோசப் குரூப் போட்டியிடவில்லை – மகனை நிறுத்துகிறார்!

தேர்தல் 14: பென்சியாங்கானில் ஜோசப் குரூப் போட்டியிடவில்லை – மகனை நிறுத்துகிறார்!

739
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான டான்ஸ்ரீ ஜோசப் குரூப், 14-வது பொதுத்தேர்தலில், தனது பென்சியாங்கான் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காக்கவில்லை. மாறாக தனது மகனை நிறுத்துகிறார்.

74 வயதான ஜோசப் குரூப் கடந்த 33 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகின்றார். இந்நிலையில், தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முதற்கட்டமாக தனது மகன் ஆர்தர் குரூப்பை 14-வது பொதுத்தேர்தலில் களமிறக்குகிறார்.

33 வயதான தனது மகன் ஆர்தர், அடுத்தத் தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு புதிய முகமாக இருப்பார் என தான் நம்புவதாக ஜோசப் குரூப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

 

பிபிஆர்எஸ் கட்சியின் துணைத் தலைவரான ஆர்தர் குரூப், தேசிய முன்னணி சார்பில் பென்சியாங்கான் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 1985-ம் ஆண்டு, டான்ஸ்ரீ ஜோசப் பைரின் கிடிங்கன் தலைமையிலான பார்ட்டி பெர்சாத்து சபா (பிபிஎஸ்) கட்சியில் இணைந்த குரூப், 33 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசியலில் கடும் சவால்களை எதிர்கொண்டவர்.

கடந்த 1994-ம் ஆண்டும், பிபிஎஸ் அரசாங்கம் வீழ்ச்சி கண்ட போது, ஜோசப் குரூப் பிபிஆர்எஸ் என்ற புதிய கட்சிக்குப் பொறுப்பேற்றதோடு, 2008-ம் ஆண்டு வரையில், தோல்விகளுக்கு மத்தியிலும், பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பென்சியாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 9,467 வாக்குகள் பெற்று 1,744 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற ஜோசப் குரூப், பிரதமர் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.