Home தேர்தல்-14 ‘அம்னோ மீது வழக்கிருந்தாலும் தேசிய முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்’

‘அம்னோ மீது வழக்கிருந்தாலும் தேசிய முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்’

795
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதிபடுத்தும் படி, அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில், அவ்வழக்கின் முடிவு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கின்றது.

இந்நிலையில், அம்னோவின் சட்ட ஆலோசகர் முகமது ஹபாரிஜாம் ஹாருன் இது குறித்து தெரிவித்திருக்கும் கருத்தில், அம்னோ மீது வழக்கு இருந்தாலும் கூட தேசிய முன்னணி வரும் ஏப்ரல் 28-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அம்னோ தலைவராக இல்லாமல், தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் வேட்பாளர்களின் பட்டியலில் கையெழுத்திட்டிருப்பதாகவும் முகமது ஹபாரிஜாம் ஹாருன் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மே 9 பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து தான் போட்டியிடுகிறார்கள் தங்களது சொந்தக் கட்சிகளைப் பிரதிநிதித்து அல்ல.

“எனவே, தேசிய முன்னணி பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாது என எதிர்க்கட்சிகள் உட்பட சில தரப்பினர் கூறும் கருத்து தவறானது” என முகமது ஹபாரிஜாம் ஹாருன் தெரிவித்திருக்கிறார்.