பிஎம்எஸ்பி (Mind and Social Concern) தலைவர் ரமேஸ் ராவ் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், “பாகான் டத்தோவில் சாஹிட் ஹமீடி வெற்றி பெற்றால், அங்கு உள்ள இந்திய வாக்காளர்களின் இறுதிச்சடங்குகளுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்.
“அனைத்தும் இலவசம்!! இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி #பாகான்டத்தோ – இறுதி சடங்குகளில் எரிப்பது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் #பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொள்வார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும், ரமேஸ் ராவ் ஏன்? அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது குறித்து விளக்கமளிக்கவில்லை.
13-வது பொதுத்தேர்தலின் கணக்கீட்டின் படி, பாகான் டத்தோவில் மொத்தம் 10,060 இந்திய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.