Home நாடு அம்னோ சட்டப்பூர்வமானதா? – 16 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு!

அம்னோ சட்டப்பூர்வமானதா? – 16 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு!

1141
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 1 வாரமே எஞ்சியிருக்கும் நிலையில், அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதி செய்யும் படி அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கின்றனர்.

அவ்வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

16 அம்னோ உறுப்பினர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகமது ஹனீப் கத்ரி அப்துல்லாவும், முன்னாள் அம்னோ சட்டவல்லுநர் சைட் இப்ராகிமும் பிரதிநிதிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

முன்னதாக முகமது ஹனீப் தனது வலைத்தளத்தில் இது குறித்து கூறுகையில், மூத்த தலைவர் ராயிஸ் யாத்திமின் ஆலோசனையை அம்னோ கவனத்தில் கொள்ள வேண்டும். அம்னோ சட்டப்பூர்வமானது என்பதற்கு நீதிமன்றத்தின் ஆணையைப் பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, சைட் இப்ராகிம் கூறுகையில், தனது பார்வையில் அம்னோ சட்டப்பூர்வமானது அல்ல என்றே தோன்றுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

“என்னுடைய பார்வையில் (சட்டப்பூர்வமானது அல்ல), என்றாலும், அது சங்கங்களின் பதிவிலாகாவின் முடிவில் உள்ளது” என்றும் சைட் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.