Home நாடு பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – சிலாங்கூர் சுல்தான் அறிக்கை!

பொதுத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – சிலாங்கூர் சுல்தான் அறிக்கை!

836
0
SHARE
Ad

Sultan-Selangor-Sultan-Sharafuddin-Idris-Shahகோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், சிலாங்கூர் அரண்மனை எப்போதும் போல் நடுநிலையாகவே இருக்கும் என்றும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

சிலாங்கூர் சுல்தான் சார்பில் அவரது தனிப்பட்ட செயலாளர் முகமது முனிர் பானி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநில அரசியலிலோ அல்லது தேசிய அரசியலிலோ சிலாங்கூர் சுல்தான் தலையிட மாட்டார் என்றும், எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பிலும் செயல்படமாட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளையில், தங்களைப் பிரதிநிதிக்கும் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் சக்தி மீது நம்பிக்கையும், மரியாதையையும் சிலாங்கூர் சுல்தான் எப்போதும் வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் முகமது முனிர் பானி குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், 14-வது பொதுத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற தமது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் சுல்தான், குறிப்பாக சிலாங்கூர் மக்கள் தேர்தல் நல்லபடியாக நடைபெற உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.