திருவல்லிக்கேணியிலிருந்து மெரினாவில் இருக்கும் கலைஞரின் நினைவிடம் நோக்கிச் செல்லவிருக்கும் இந்த அமைதிப் பேரணி வெற்றியடைந்தால், அதன் மூலம் அழகிரி தனது செல்வாக்கை நிரூபிக்க முடியும் என்பதோடு, தமிழக அரசியலில் முக்கிய இடத்தையும் அவர் பிடிப்பார் எனக் கருதப்படுகிறது.
இந்தப் பேரணியின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க அழகிரி செய்திருக்கும் முடிவால் திமுக வட்டாரங்களும் கலக்கத்தில் இருக்கின்றன.
அழகிரியின் பேரணி வெற்றியடைந்தால் திமுக உடையக் கூடிய வாய்ப்பும், பாஜக போன்ற மற்ற கட்சிகள் திமுகவை உடைக்கும் நோக்கில், அழகிரியோடு கூட்டணி வைக்கும் திருப்பங்களும் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் திமுக பொறுப்பாளர் ஒருவர் அழகிரிக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதுவும் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.