Home நாடு ‘ஹார்டு ராக் கேஃப்’ திறப்பதால் தீங்கு இல்லை – மகாதீர் கருத்து

‘ஹார்டு ராக் கேஃப்’ திறப்பதால் தீங்கு இல்லை – மகாதீர் கருத்து

541
0
SHARE
Ad

hard-rock-cafe-logoபுத்ர ஜெயா, ஜன 8 – ஆபாசங்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் புத்ரஜெயாவில் ‘ஹார்டு ராக் கேஃப்’ கடையின் கிளை திறப்பதில் எந்த ஒரு தீங்கும் ஏற்படப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு விஷயங்கள் எதுவும் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிரானவை அல்ல.  எனினும் அங்கு மது விற்பனை அல்லது கீழ்த்தரமான நிகழ்ச்சிகள் எதுவும் இருக்கக் கூடாது என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

“புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது சுமார் 100,000 மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் மலாய்க்காரர்கள். பொழுதுபோக்கு இல்லையென்றால் அவர்கள் அங்கு வந்திருக்கமாட்டார்கள்” என்று மகாதீர் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நமக்கு பொழுதுபோக்குகள் தேவை. திருமண நிகழ்ச்சிகளில் கூட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு தடையில்லை. அப்படியிருக்க புத்ரஜெயாவில் பொழுதுபோக்கு கடைகளும், உணவகங்கள் இருப்பதில் என்ன தவறு?” என்று மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், புத்ரஜெயா என்பது வெறும் அரசாங்க கட்டிடங்களாக மட்டும் இருந்து விடக்கூடாது என்று கூறிய மகாதீர், அங்கு அமைக்கப்படும் கடைகள் அதன் கட்டுப்பாட்டுக்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

புத்ரஜெயாவில் ‘ஹார்டு ராக் கேஃப்’ கடை திறக்க வேண்டும் என்று கூறப்படும் விண்ணப்பங்களுக்கு நேற்று பதிலளித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், இஸ்லாமிய கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டால் மட்டுமே அக்கடைக்கு தான் அனுமதியளிக்கப் போவதாக தெரிவித்தார்.

ஆனால் அனைத்துலக ஹார்டு ராக் நிறுவனம் புத்ரஜெயாவில் கிளை திறப்பது தொடர்பாக கூறப்படுவதை மறுத்துள்ளது.