Home வாழ் நலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மருத்துவம்

699
0
SHARE
Ad

padam

கோலாலம்பூர், ஜன 9- சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து கொண்டு நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா  இலைகளை பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர், மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு  பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்.

தினமும் 100 மில்லி கஷாயம் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 நாளைக்கு ஒருமுறை புதியதாக கஷாயத்தை தயாரித்து வைத்து  கொள்ளலாம். சர்க்கரை நோயை பொருத்த வரை உணவு முறை முக்கியமான ஒன்று. வழக்கமாக அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு உணவு வகைகளை  சாப்பிட வேண்டும். இரவில் உணவின் அளவை பாதியாக குறைத்து கொள்ள வேண்டும். உடல் கட்டுப்பாடுக்கு ஏற்ப 20 முதல் 30 நாட்களுக்கு  கஷாயத்தை தொடர்ந்து குடித்து வரவேண்டும்.

#TamilSchoolmychoice

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:

மா இலை, அத்தி இலை ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி  கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு  பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள புண் குணமாகும்.

உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்க போகும் முன் தடவி  வந்தால் நோய் குணமாகும். பகல் நேரங்களில் உணவு சாப்பிடுவதற்கு முன்பு பப்பாளி பழத்தை சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு:

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம்  பருப்பை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.