Home உலகம் மேற்கு அமெரிக்காவைத் தாக்கிய பனிப்புயலில் 21 பேர் உயிரிழப்பு

மேற்கு அமெரிக்காவைத் தாக்கிய பனிப்புயலில் 21 பேர் உயிரிழப்பு

547
0
SHARE
Ad

CORRECTION Deep Freeze Illinois

வாஷிங்டன், ஜன 9 – அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் தற்போது மத்திய மேற்கு அமெரிக்கா பகுதிகளில் வீசுகிறது.

இதனால் அங்கு தட்பவெட்ப நிலை உறைநிலைக்குக் கீழாக -31 டிகிரி செல்சியஸ் அளவுக்குச் சென்றுள்ளது.

#TamilSchoolmychoice

மினியாபோலிஸ் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை -18 டிகிரி செல்சியஸ் இருந்த தட்பவெட்ப நிலை, திங்கள்கிழமை -31 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. காற்றில் குளிரின் அளவு -45 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது.

ஒக்லஹோமா, டெக்ஸாஸ், இன்டியானா பகுதிகளிலும் -40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெட்ப நிலை குறைந்தது. அலாபாமா, பால்டிமோர், ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிகக் கடும்குளிராக இது கருதப்படுகிறது.

இதனால், அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முழுவதும் பனியால் மூடப் பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது. சுமார் 1.87 கோடி மக்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு, தெற்கு பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் ஓரடி உயரத்துக்கும் அதிகமாக பனிபடிந்துள்ளது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலுமாக பனியால் மூடப்பட்டுள்ளன.

winter

இல்லினாய்ஸ் மாகாணத்தில் 375க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. கடும் பனிமூட்டம் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இருப்பினும் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. வாகனங்களில் இருந்து யாரும் வெளியேற முடியாததால், அவர்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர் என இல்லினாய்ஸ் அவசரகால மேலாண்மைத் துறை இயக்குநர் ஜோனதன் மோங்கன் தெரிவித்தார். சில பகுதிகளில் கடும் குளிர் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்ததாகவும், தற்போது கிழக்கு மற்றும் தெற்கு திசையை நோக்கி அந்தப் புயல் நகருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடும் குளிருக்கு இல்லினாய்ஸில் 7 பேர், இண்டியானாவில் 6 பேர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டன், ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.