Home வணிகம்/தொழில் நுட்பம் துபாய் வர்த்தகத் திருவிழாவில் வீடு வாங்கினால் சொகுசு காரும் இலவசம் !

துபாய் வர்த்தகத் திருவிழாவில் வீடு வாங்கினால் சொகுசு காரும் இலவசம் !

509
0
SHARE
Ad

varthagam vizla

 துபாய், ஜன 10 –  துபாயில் நடைபெற்று வரும் வர்த்தகத் திருவிழாவில் விற்பனையாளர்கள் பார்வையாளர்களை கவரும்படி போட்டிபோட்டு பரிசு மழையைப் பொழிந்து வருகின்றனர். இவ்வர்த்தகத் திருவிழாவில் பங்கு பெற்றுள்ள நில விற்பனையாளர் ஒருவர் மக்களை கவரும் வகையில் ஒரு சலுகையை அறிவித்துள்ளார்.

‘டமாக் பிராப்பர்டீஸ்’ என்ற நிலம் விற்பனை செய்யும் நிறுவனம் தங்களுடைய கட்டுமானத் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவோருக்கு வீட்டுடன் சொகுசுக் காரை இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. அவ்வகையில், ’லம்போர்கினி அவன்டடோர் ரோட்ஸ்டர்’ கார் இலவசமாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  அதேபோல் வேறு சில குடியிருப்புகளுக்கு பரப்பளவிற்குத் தக்கவாறு  ‘பிஎம்டபிள்யு’ அல்லது ’மினி கூப்பர்’ போன்ற கார்கள் அளிக்கப்படும் என்றும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

2014 ஆம் ஆண்டின் புதிய சொகுசுக் கார்களை வழங்குவது ஒரு உற்சாகமான ஊக்கப்பரிசாக சர்வதேச பார்வையாளர்களால் பாராட்டப்படுகின்றது என்று இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான நியால் மக்லோலின் தெரிவித்தார்.

மேலும், வர்த்தகத் திருவிழாவில்போது தங்கள் நிறுவனத்தின் திட்டங்கள் எப்போதும் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று எனவும் இவ்வாறான ஊக்கப்பரிசுகளை வழங்குவதன்வழி லாபகரமான முடிவுகளை இந்நிறுவனம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வகையில், சென்ற வருடமும் இந்தத் வர்த்தகத் திருவிழா சமயத்தில் வீடுகளை வாங்கியோருக்கு பரப்பளவிற்குத் தக்கவாறு ஆடி கார்களின் வகைகள் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது ஆகும்,