Home உலகம் உலகப் புகழ் பெற்ற துபாய் கண்காட்சி நவம்பர் 6-ல் தொடங்குகிறது!

உலகப் புகழ் பெற்ற துபாய் கண்காட்சி நவம்பர் 6-ல் தொடங்குகிறது!

626
0
SHARE
Ad

Dubai-Global-Villageதுபாய், செப்டம்பர் 23 – சுற்றுலா பயணங்களுக்குப் பெயர் பெற்ற இடமான துபாயில், ஆண்டு தோறும் நடைபெறும் ‘குளோபல் வில்லேஜ்’ (Global Village) கண்காட்சி இந்த வருடம் நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகில் உள்ள‌ சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களது நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு கடைகளை அமைத்து புராதான மற்றும் வரலாற்று பொருட்களை விற்பனை செய்வர்.

Global-Villageஉலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பொருட்களும் இங்கு விற்பனைக்கு வரும். இந்த கண்காட்சி இந்த வருடம் நவம்பர் மாதம் 6-ம் தேதி தொடங்கி அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சுமார் 65 நாடுகளைச் சேர்ந்த 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இங்கு 3500-கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும் என்று சுற்றுலா அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த கண்காட்சி குறித்து சுற்றுலா நிறுவனம் ஒன்று கூறியிருப்பதாவது: “பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்முகக் கலாச்சாரத்தை இந்த 6 மாத காலத்தில் காண முடியும். துபாயின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வருவாய், இந்த 6 மாத காலத்தில் உச்சத்தை அடையும்.

global-village-dubaiசுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை பெருக்குவதற்காகவே துபாய் அரசு ஆண்டு தோறும் இந்த கண்காட்சியை நடத்தி வருகின்றது. நிகழ்ச்சியின் முடிவில் பல்வேறு நாடுகளின் கலாச்சார நடனங்கள் உட்பட 12,000-க்கு மேற்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.