Home நாடு ஜனவரி 21 ல் கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை!

ஜனவரி 21 ல் கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை!

502
0
SHARE
Ad

sabah-illegalsபுத்ராஜெயா, ஜன 10 – நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிய வரும் ஜனவரி 21 ஆம் தேதி முதல் அதிரடி சோதனை நடத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “இந்த அதிரடி சோதனையை அமைச்சு மிகப் பெரிய அளவில் நடத்தவுள்ளது. இந்த சோதனை நடவடிக்கையில் குடி நுழைவுத்துறை, காவல்துறை, ரேலா அமைப்பு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தோர் பங்கேற்கவுள்ளனர்.” என்றார்.

மேலும், “கள்ளக்குடியேறிகள் நிர்வகிப்பு சிறப்புத் திட்டம் (பிகேபிபி) வரும் ஜனவரி 20 ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அதன் பின்னர் இந்த மாபெரும் சோதனை மேற்கொள்ளப்படும். பிடிபடும் கள்ளக்குடியேறிகள் அவர்களது சொந்த நாட்டுக்கே திரும்பி அனுப்பப்படுவார்கள். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமோ அல்லது தூதரகமோ ஏற்றுக்கொள்ளும்.” இவ்வாறு நேற்று நடைபெற்ற அந்நியத் தொழிலாளர்களுக்கான ஐ-கார்டு அட்டை அறிமுக விழாவில் சாஹிட் உரையாற்றினார்.

#TamilSchoolmychoice