Home One Line P1 6 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கரை ஒதுங்கின

6 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கரை ஒதுங்கின

590
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: இந்தோனிசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கோத்தா திங்கி அருகே பண்டார் பெனாவாரில் உள்ள பாந்தாய் தெலுக் சி என்ற இடத்தில் கரை ஒதுங்கியுள்ளன.

வழிப்போக்கர்கள் காலை 9.40 மணியளவில் சடலங்களைக் கண்டுபிடித்து காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், 31 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றதாக நம்பப்படுவதாக கோத்தா திங்கி காவல் துறைத் தலைவர் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“பாதிக்கப்பட்டவர்கள் நீரில் மூழ்குவதற்கு முன்பு அவர்களது படகு வலுவான நீரோட்டங்களால் சேதமடைந்ததாக நம்பப்படுகிறது.

“இவர்களுடன் வந்தவர்கள் என்று நம்பப்படும் மேலும் ஆறு இந்தோனிசிய ஆண்களை காவல் துறை மற்றும் ஆயுதப்படை வீரர்கள் கைது செய்தனர். ” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும், படகில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

உயிர் தப்பியவர்களை குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைத்ததாக ஹுசின் கூறினார்.