Home One Line P1 ‘பிரதமராக என்னாலும் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியும்’ – அன்வார்

‘பிரதமராக என்னாலும் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியும்’ – அன்வார்

677
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் வேட்பாளராக தேர்வாக, தமக்கான பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தன்னாலும் முடியும் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிட்ட கருத்து குறித்து பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார். ஒரு வேளை அன்வார் இப்ராகிம் மீண்டும் ஆதரவைப் பெற முடியாவிட்டால், வாரிசானின் முகமட் ஷாபி அப்டாலுக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு குவான் எங் கூறியிருந்தார்.

“அவர் அவரது கருத்தை வெளியிட்டார். கருத்துகளை நாம் ஏற்போம், அதில் பிரச்சனை இல்லை. ஆனால், நான் ஆதரவைப் பெறாவிட்டால் ஷாபிக்கு வழியை ஏற்படுத்துவது என்பது சரியில்லை”

#TamilSchoolmychoice

“எனது பதில், என்னால் பிரதமராக பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியும்” என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

ஷாபி அப்டாலை பிரதமர் வேட்பாளராக அமரச் செய்ய ஜசெக தொடர்ந்து வழி ஏற்படுத்துவதால், பிகேஆர் கட்சி மட்டத்தில் இது பெரும் விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.

ஜசெக, அமானா, வாரிசான் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் (பெஜுவாங் கட்சி ஏற்படுத்தப்படுவதற்கு முன்பு) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது ஷாபியை பிரதமர் வேட்பாளராக லிம் முதன் முதலாக முன்மொழிந்தார்.

பிரதமர் வேட்பாளர்களாக ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ள முடியாததால் அன்வாருக்கும் மகாதீருக்கும் இடையிலான முட்டுக்கட்டையை உடைப்பதை இந்தப் பரிந்துரையை லிம் குவான் எங் நோக்கமாகக் கொண்டு அவ்வாறு தெரிவித்தார்.