Home One Line P1 அல்ஜசீரா மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

அல்ஜசீரா மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

605
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டது என்று சித்தரிக்கும் ஆவண அறிக்கைகளை தயாரித்த அல்ஜசீரா செய்தி நிறுவனம் நெறிமுறையற்றது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் குற்றம் சாட்டினார்.

தனது தினசரி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், அல்ஜசீரா ஆவணப்படம் ஒரு பொய் என்று கூறினார். அரசாங்கம் புலம்பெயர்ந்தோரை மட்டுமல்ல, அதிக கொவிட் 19 சம்பவங்கள் கொண்ட சில பகுதிகளில் அனைவரையும் அடைத்துள்ளது என்று கூறினார்.

“இந்தக் கொள்கை அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் இனவெறியுடன் செயல்படுகிறோம் என்று குற்றம் சாட்டுவதும் உண்மையல்ல. செய்யப்பட்டது சட்டபூர்வமானது. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்ய மலேசியாவின் குடிநுழைவுத் துறை சட்டத்தைப் பயன்படுத்துகிறது.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை அனுமதிக்கும் ஒரு நாட்டைக் குறிப்பிடுமாறு அல்ஜசீராவுக்கு இஸ்மாயில் சவால் விடுத்தார்.

“எனக்குத் தெரிந்தவரை, அப்படி ஒரு நாடும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு நாட்டிலும் நமக்கு ஒத்த குடிநுழைவு சட்டம் உள்ளன.” என்று அவர் கூறினார்.

குழந்தைகள் விலங்கிடப்பட்டு தடுப்புக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது போன்ற அல் ஜசீராவின் அறிக்கைகளும் பொய் என்று இஸ்மாயில் மேலும் கூறினார்.

“இதுவும் ஒரு வெளிப்படையான பொய். நிருபர்களுக்கு நேரடி நெறிமுறைகள் இல்லை என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

குழந்தைகள் விலங்கிடப்படமாட்டார்கள் என்றும் அவர்கள் பெற்றோருடன் பிரிக்கப்படுவார்கள் என்றும் இஸ்மாயில் விளக்கினார்.

எனவே, இந்த அறிக்கைக்கு மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அல் ஜசீராவை இஸ்மாயில் வலியுறுத்தினார்.

“எனவே ஒரு அனைத்துலக ஊடகமாக உயர்ந்த பத்திரிகை நெறிமுறை இருக்க வேண்டும். அவர்கள் செய்வதை நிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஆவணமற்ற 4,924 குடியேறியவர்களில் 777 பேர் கொவிட் 19 நேர்மறை மற்றும் சிகிச்சை பெற்று வருவது கண்டறியப்பட்டது என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

அவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இஸ்மாயில் கூறினார்.

68,829 வெளிநாட்டினருக்கு ஆவணங்களுடன் கொவிட் 19 பரிசோதனையையும் அரசாங்கம் நடத்தியது. அவர்களில் 2,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.