Home உலகம் வரலாறு காணாத பனியில் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது!

வரலாறு காணாத பனியில் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது!

516
0
SHARE
Ad

nayagara

வாஷிங்டன், ஜன 11 – அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள், கனடாவின் ஒரு பகுதிகள்  அனைத்தும் கடுமையாக உறைபனிக்கு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உறைபனி காரணமாக வாகன விபத்துகளிலும், குளிரில் சிக்கியும் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனியின் காரணமாக அமெரிக்கா, கனடாவின் துருவ பிரதேசங்களில் உள்ள நதிகள் உறைந்து காட்சி அளிக்கின்றது.இந்நிலையில் அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் அமைந்ததுள்ள உலகின் மிகப் பெரிய நயாகரா நீர்வீழ்ச்சியும் உறைந்து காணப்படுகின்றது. அவை பனியில் உறைந்து மிகப் பெரிய பனிச்சிற்பம் போல் காட்சியளிக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று முதல் படிப்படியாக வெப்பநிலை பூஜ்யத்தை நோக்கி உயரத் தொடங்கியுள்ளதால் ஓரிரு நாட்களில் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த உறைபனி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 1 கோடியே 60 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.