Home உலகம் தேவயானி விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வேதனையளிக்கிறது : அமெரிக்கா கருத்து

தேவயானி விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வேதனையளிக்கிறது : அமெரிக்கா கருத்து

704
0
SHARE
Ad

jen beski

வாஷிங்டன், ஜன 11- தேவயானி சொந்த நாடு திரும்பினாலும் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி தெரிவித்தார்.

அமெரிக்காவில் விசா முறைகேடு புகாருக்குள்ளான தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை வேதனையளிக்கிறது என்றும் இரு நாட்டு நல்லுறவில் ஏற்பட்ட விரிசல் விரைவில் சரி செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே டெல்லி வந்த தேவயானி செய்தியாளர்களை சந்திக்க மறுத்தார் இருப்பினும் அவர் தமது போராட்டத்தில் பக்கபலமாக இருந்த நாட்டிற்கு நன்றி தெரிவித்தார்.