வாஷிங்டன், ஜன 13- விசா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய தூதர் தேவயானி, தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.
தேவயானி அமெரிக்காவை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரை 48 மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது .
இந்தியாவில் இருந்து அமெரிக்க தூதர் வெளியேற்றப்படுவது வருத்தமளிக்கிறது. இதனால் இந்திய அமெரிக்க உறவில் பின்னடைவு ஏற்படாது. இதுகுறித்து இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, இருநாட்டு உறவை புதுப்பிக்கும் என்று நம்புகிறோம் எனக் கூறினார்.
எதிர்காலத்தில் அவர் அமெரிக்கா வருவதை கண்காணிக்க அவரது பெயர் குடியேறுதல் பட்டியலில் வைக்கப்படும். கிளம்பும் முன்னரே அவரிடம் பிடி ஆணை (வாரண்ட்) தரப்பட்டுள்ளது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.