Home அவசியம் படிக்க வேண்டியவை தாய்லாந்தின் தலைநகரை மூடும் போராட்டம் : இராணுவ புரட்சி அபாயம்

தாய்லாந்தின் தலைநகரை மூடும் போராட்டம் : இராணுவ புரட்சி அபாயம்

610
0
SHARE
Ad

 OUKWD-UK-THAILAND-PROTEST

பாங்காக், ஜன 13– தாய்லாந்தில் யிங்லக் ஷினாவத்ரா பிரதமர் பதவி விலக கோரி எதிர்க் கட்சியினர் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெருக்கடி முற்றியதால் தனது அரசை கலைத்த யிங்லக் ஷினாவத்ரா வருகிற பிரப்ரவரி 2–ந் தேதி பாராளு மன்ற தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

இருப்பினும், யிங்லக் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியறுத்தி தலைநகர் பாங்காக்கில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று தலைநகரான பாங்காக்கை தற்காலிகமாக மூடும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதன்படி முக்கிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் சாலைகள் மூட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று தொடர்வண்டி மற்றும் படகு போக்குவரத்தையும் நிறுத்த போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறும் வாய்ப்பு உள்ளது. அதை பயன்படுத்தி ராணுவ புரட்சி ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

ஆனால் போராட்டத்தை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக துணை பிரதமர் சுராபாங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணிக்காக பாங்காக்கை சுற்றி 12 ஆயிரம் காவல்படையினரும் 8 ஆயிரம் ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.