Home இந்தியா இந்தியாவில் போலியோ நோய் முற்றிலும் ஒழிந்தது!

இந்தியாவில் போலியோ நோய் முற்றிலும் ஒழிந்தது!

837
0
SHARE
Ad

Polio_932788fடில்லி, ஜன 13 – இந்தியாவில் தற்போது போலியோ என்ற முடக்குவாத நோய் முற்றிலும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த நோயினால் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் குழந்தைகளுக்கு மேல் பாதிக்கப்பட்டு வந்தனர். அதேவேளையில் உலக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதி பேர் இந்தியர்களாகவும் இருந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த நோய் பாதிப்பு முற்றிலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மேற்குவங்கத்தில் ருக்சார் என்ற 2 வயது சிறுமிக்கு ஏற்பட்ட போலியோ பாதிப்பே இந்தியாவில் கடைசியானது ஆகும்.

#TamilSchoolmychoice

ஆண்டு ஒன்றுக்கு 5 முதல் 6 தடவை வரை நடத்தப்படும் போலியோ ஒழிப்பு முகாம்களில் 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. போலியோ இல்லாத நாடாக இந்தியா தற்போது மாறியிருந்தாலும், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இது முற்றிலும் ஒழிக்கப்படாததால் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு போலியோ பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சோமாலியா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளிலும் போலியோவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.