Home நாடு ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சான் கோங் சோய் விடுதலை! குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டன!

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சான் கோங் சோய் விடுதலை! குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டன!

445
0
SHARE
Ad

Chan-Kong-Choy-300 x 200கோலாலம்பூர், ஜனவரி 13 – தீர்வையற்ற கிள்ளான் துறைமுக விவகாரம் குறித்த ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டான்ஸ்ரீ சான் கோங் சோய் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

எதிர்தரப்பு சமர்ப்பித்த கடிதத்தை ஆராய்ந்த பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இன்று மீட்டுக் கொண்டது.

2004 மற்றும் 2006ஆம் ஆண்டுக்கிடையில் கோலா டைமென்சி என்ற நிறுவனத்திற்கு கட்டுமானக் குத்தகைகளை வழங்கியது தொடர்பில் அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா படாவியை தவறுதலாக வழி நடத்தினார் என கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

58 வயதான சான் இந்த குற்றங்களை பிரதமர் அலுவலகத்தின் நான்காவது மாடியில் புரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதற்கு முன்னால், முன்னாள் போக்குவரத்து அமைச்சரான துன் லிங் லியோங் சிக் இதே தீர்வையற்ற கிள்ளான் துறைமுக விவகாரம் தொடர்பிலான மற்றொரு வழக்கிலிருந்து கடந்த அக்டோபர் 25ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான சான் மசீசவில் துணைத் தலைவராகவும் இருந்தார்.