Home வாழ் நலம் சரும பராமறிப்பிற்கு உதவும் உருளைக்கிழங்கு

சரும பராமறிப்பிற்கு உதவும் உருளைக்கிழங்கு

532
0
SHARE
Ad

potato-mask

கோலாலம்பூர், ஜன 15- சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதனால், சருமத்தில் பிரச்சனைகள் தான் அதிகரித்திருக்கும்.

எனவே எப்போதும் சரும அழகை அதிகரிப்பதற்கு ஆசைப்படுபவர்கள்  இயற்கை வழிகளைப் பின்பற்றினால் சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராது. அவ்வகையில் உருளை கிழங்கு கொண்டு சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகளை மாலை மலர் பக்கம் வெளியிட்டிருந்தது. அவை பின்வருமாறு :

#TamilSchoolmychoice

* உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சம அளவில் எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

* சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியை போக்க வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் 2 மேசைக்கரண்டி பால் பொடி மற்றும் 2 மேசைக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து பசையாக செய்து, சருமத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து பசையாக செய்து, அதனை சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து, முதலில் வெதுவெதுப்பான நீரில் அலசி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் முப்பருவால் ஏற்பட்ட தழும்புகள் படிப்படியாக மறையும்.