Home உலகம் தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கப்பூர் அரசு மதுவுக்கு தடை

தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கப்பூர் அரசு மதுவுக்கு தடை

582
0
SHARE
Ad

alcohol

சிங்கப்பூர், ஜன 15- ஜனவரி 17ம் தேதி கொண்டாடப்படவுள்ள தைப்பூசத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் மதுபானம் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

தைப்பூச ஊர்வலம் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து காலை 11 மணிக்கு துவங்கி, டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலை சென்றடைய உள்ளது. அதனால், இந்த தடை உத்தரவு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

டிசம்பர் 8ம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.