கோலாலம்பூர், ஜன 15 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்-ன் (படம்) ஓரினப்புணர்ச்சி வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ஜூடி ப்லேசியஸ் பெரேரா, மலேசிய உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் குழுவில் சேரும் தனது முயற்சியில் தோல்வி கண்டுள்ளார்.
வழக்கறிஞர் மன்றத்தில் தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று ஜூடி ப்லேசியஸ் பெரேரா மலேசிய உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது மனுவை நிராகரிக்குமாறு வழக்கறிஞர் மன்றம் விடுத்திருந்த கோரிக்கையை தான் ஏற்றுக்கொண்டதாக நீதிபதி ஸாலேஹா யூசோப் அறிவித்தார் என்று ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.