Home இந்தியா வீரப்பன் கூட்டாளிகளின் மரண தண்டனை ரத்து!

வீரப்பன் கூட்டாளிகளின் மரண தண்டனை ரத்து!

706
0
SHARE
Ad

Tamil_News_large_650020டில்லி, ஜன 21 – சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரின் மனுவை நீதிபதி சதாசிவம் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

அவ்விசாரணையில், மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அவர்கள் அளித்த கருணை மனுக்கள் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டது என்றும், எனவே அவர்களது மரண தண்டனையை ரத்து செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 1993 ல் மேட்டூர் அருகே பாலாற்றில் கண்ணி வெடித்தாக்குதல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகளான பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன், ஞானபிரகாசம் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மைசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை  விசாரித்த உச்சநீதிமன்றம் 2004 ல் நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது.

அதனை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த கருணை மனுக்கள் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். அதனை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கருணை மனுக்கள் காலதாமதமாக நிராகரிக்கப்பட்டதால், இவர்களது மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.