Home உலகம் இந்துக்களை தாக்கினால் கடும் நடவடிக்கை! பிரதமர் எச்சரிக்கை

இந்துக்களை தாக்கினால் கடும் நடவடிக்கை! பிரதமர் எச்சரிக்கை

575
0
SHARE
Ad

Sheikh Hasina claimed Ilias Ali may be hiding on the orders of his own party.

தாகா, ஜன 21- இந்துக்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த 5ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் சத்கிரா என்ற பகுதியில் வாக்குச்சாவடிகள் தாக்கப்பட்டதுடன், இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

அப்பகுதியை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வசிப்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

இங்கு ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தாக்கப்பட வாய்ப்புள்ளது.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வங்கதேசத்தில் சம உரிமையுடன் தொடர்ந்து வசிக்கலாம்.

நாட்டில் மக்களிடையே நிலவும் அமைதியை யாரும் சீர்குலைக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

சத்கிரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எங்கு பதுங்கியிருந்தாலும் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.